Breaking
Sun. Mar 16th, 2025

பிரான்ஸின் நைஸ் நகரில் தீவிரவாதிகளால்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் லொரியின் சாரதியை பிரான்ஸ் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த நபர் 31 வயதான  துனீஷியாவை பிறப்பிடமாகக்கொண்ட மொஹமத் லஹ்வீஸ் புஹ்லெல் எனப்படும் பிரான்ஸ் பிரஜையென தெரியவந்துள்ளது.

இவர் சிறு குற்றங்களை புரிந்துவந்த, பொலிஸாருக்கு பரிட்சையமான ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பிரான்ஸின் தீவிரவாத எண்ணம் கொண்ட நபர்களின் பட்டியில் இவர் உள்ளடக்கப்பட்டிருக்கில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தனியாக லொரியை செலுத்தினாரா? அல்லது இவருடன் வேறு யாரும் இருந்தார்களா? என்பது தெளிவாக தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நைஸ் நகரில் அவரை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

By

Related Post