Breaking
Fri. Nov 15th, 2024

பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரசா மே, தனது புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களை நியமித்துள்ளார். நிதியமைச்சராக பிலிப் மேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்கலாமா? வேண்டாமா? என்று சமீபத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றது.

இதனால் கேமரூன் பிரதமர் பதவியில் இருந்து நேற்று விலகினார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ராணி எலிசபெத், புதிய பிரதமராக தெரசா மேவை நியமித்தார். அதையடுத்து, டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் தெரசா மே நேற்று இரவு பதவி ஏற்றார். பின்னர் அவர் தனது புதிய அமைச்சரவை உறுப்பினர்களை நியமித்தார்.

உள்துறை மந்திரியாக ஆம்பர் ரூட் நியமிக்கப்பட்டுள்ளார். லண்டனின் முன்னாள் மேயரும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வலியுறுத்தி பிரசாரம் செய்தவருமான, போரிஸ் ஜான்சன் புதிய அமைச்சரவையில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

EAC98758-E71D-49D1-A6F6-DB8473D3A622_L_styvpf

பிரிட்டன் நிதியமைச்சராக இருந்த ஜார்ஜ் ஆஸ்போர்ன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, கேமரூன் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இருந்த பிலிப் ஹேமண்ட் புதிய நிதியமைச்சராக  நியமிக்கப்பட்டிருக்கிறார். மைக்கேல் பாலோன் பாதுகாப்பு அமைச்சராகத் தொடர்கிறார். லியாம் ஃபாக்ஸ் சர்வதேச வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டேவிட் டேவிஸ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டியது தொடர்பான விஷயங்களுக்காகப் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

By

Related Post