Breaking
Sun. Dec 22nd, 2024

பிரிட்டன் வெளியேற்றத்திற்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டிஷ் வங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது என பேங்க ஆஃப் பிரான்ஸ் வங்கியின் ஆளுநர் ஃபிரான்சிஸ் வில்லேராய் டி கல்ஓ தெரிவித்துள்ளார்.

எல்லை கடந்த சேவைகளில் வங்கி பாஸ்போர்ட் அமைப்புகளை அணுக, ஒருங்கிணைந்த சந்தையில் அனைத்து விதிகளையும் பின்பற்றி பிரிட்டன் உறுப்பினராக இருப்பதை சார்ந்தே இருக்கும் என வில்லேராய் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் இந்த வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும், ஆனால், அந்தத் தாக்கங்கள் பிரிட்டனுக்கு மேலும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

By

Related Post