Breaking
Tue. Dec 24th, 2024

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவராக குமார் சங்கக்காரவை செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார இன்று தனது இறுதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

இந்தியாவுடன் இடம்பெற்று முடிந்த இப்போட்டியின் இறுதியில் பரிசளிப்பு நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குமார் சங்கக்காரவை பிரித்தியானியாவுக்கான

இலங்கைத் தூதுவராக செயற்படுமாறு அழைப்பு விடுத்தார்.

“குமார் சங்கக்கார விருப்பப்படுவாரோ தெரியாது எனினும் எனது வேண்டுகோளை முன்வைக்கிறேன். அவர் பிரித்தானியாவுக்கான தூதுவராக செயற்பட வேண்டும்” என ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.

Related Post