Breaking
Sun. Dec 22nd, 2024

கொன்சவேற்றிவ் கட்சி எதிர்வரும் பிரிட்டிஷ் தேர்தலில் வெற்றி பெற்றால் தாம் 100 நாள் காலப்பகுதியினுள் மக்களுக்கு பல திட்டங்களை வழங்கவுள்ளதாக டேவிட் கமரோன் உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக தொழிலாளர்களின் கொடுப்பனவுகள், சேமலாபங்கள், வீடமைப்பு மற்றும் சிறார்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை 100 நாள் காலப்பகுதியினுள், வாக்காளரின் திருப்திக்கு அமைய நிறைவேற்றப் போவதற்காக குறிப்பிட்டுள்ளார்.

கொன்சவேற்றிவ் கட்சி முழு அளவிலான வெற்றியை பெற்றதும், மகாராணியாரின் உரையின் போது தெரிவிக்கப்பட்ட குறைந்த வருவாயை பெறுபவர்களின் வரி முறைகள் உரிய முறையில் பின்பற்றப்படும் எனவும் டேவிட் கமரோன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரிட்டிஷ் தேர்தல் பெறுபேறுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புக்களுக்கு அமைய எந்தவொரு கட்சியும் இறுதிப் பெரும்பான்மையினை பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post