Breaking
Sun. Jan 12th, 2025

பிரேசில் நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 7, 1822ல் போர்ச்சுக்கல்  இடமிருந்து பிரேசில் தனது சுதந்திரத்தை பெற்றது, பிரேசில் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக உயிரினை தியாகம் செய்த போராளிகளை தான் இந்த தினத்தில் நினைவு கூறுவதாகவும் மேலும் பிரேசில் நாட்டுடனான நல்லுறவை மேம்படுத்த நாம் கடமைப் பட்டுள்ளோம். உலக நாடுகளில் இந்தியாவுக்கான ஒரு முக்கிய நட்பு நாடு பிரேசில் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவையும் ஒத்துழைப்பையும் விரிவு படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Post