Breaking
Mon. Dec 23rd, 2024

மேரிலாந்தில் அனுமதியின்றி பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட 9 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடமேற்கு வாஷிங்டனுக்கு அருகில் ஹாகர்ஸ்டவுன் என்ற பகுதியில் வசிக்கும், ஜாக் கிரேசியா என்ற சிறுவன், சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த பிறந்தநாள் கேக்கை திருட்டுத்தனமாக சாப்பிட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவனது தாயின் ஆண் நண்பர் ராபர்ட் வில்சன் (30), ஜாக்கை கைவிலங்கிட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

இதுபற்றி அச்சிறுவனின், தாயாரின் தம்பி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது, முகம், கழுத்து, முதுகு, வயிறு மற்றும் கால்களில் பலமாக அடிப்பட்டிருந்த ஜாக் மூர்ச்சையாகி மயங்கிய நிலையில் கிடந்தான். அவனை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜாக் இறந்துபோனான்.

சிறுவனை தாக்கிய வில்சன் (30) போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறுவன் உடல் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்ததும், வில்சன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மேல்நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகிறது.

Related Post