Breaking
Sat. Jan 11th, 2025

இலங்கையில் பிறக்கும் சிசுக்களின் செவிப்புலன் நிலமையைப் பரீட்சிப்பது தொடர்பான முதலாவது இரண்டு நாள் செயலமர்வு  (30.03.2015) நேற்று  கண்டி, பேராதனை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சிறுவர் ஆஸ்பத்திரியில் ஆரம்பமாகியது.
இலங்கை நாட்டில் முதல் முறையாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக செவிப்புலன் பரீட்சிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இச்செயலமர்வின் இரண்டாம் நாளான இன்று (31ம் திகதி) முற்பகல் 11.00 மணிக்கு பிறந்த சிசுவின் செவிப்புலன் நிலமையைச் செயல் ரீதியாகப் பரீட்சிக்கும் நிகழ்வு பேராதனை போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தலைமையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தொண்டை, காது, மூக்கு தொடர்பான விஷேட மருத்துவ நிபுணர் திருமதி சந்திரா ஜயசூரிய, மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இச்செயலமர்வு ஆரம்பமாகவுள்ளது.

சுமார் 400 பிள்ளைகள் சுமார் காது குறைபாடுகளுடன் வருடாவருடம் பிறக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் சிறுவர்கள் மற்றும் வளர்ந்தவர்கள் மத்தியில் காணப்படும் செவிப்புலன் குறைபாடு; காது கேளாமை என்பவற்றை இனங்கண்டு அவற்றுக்குரிய சிகிச்சையை பெற்றுக்கொடுக்கவென சுகாதார அமைச்சு 2012 ஆம் ஆண்டில் செவிப்புலன் குறைபாடு மற்றும் காது கேளாமையைத் தவிர்ப்பதற்கான தேசிய வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் முன்னோடி திட்டங்கள் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டத்தக்கதொன்றாகும்.

Related Post