Breaking
Sun. Dec 22nd, 2024

தென் ஆப்பிரிக்காவில் குரூட் செக்குர் ஆஸ்பத்திரியில் கடந்த 1997-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு ஷெபானி நர்ஸ் என பெயரிட்டனர்.

தாய் மயக்கமாக இருந்தபோது ஒரு பெண், பிறந்த பச்சிளங் குழந்தையை கடத்தி சென்றார். அதை தனது குழந்தை எனக்கூறி வளர்த்து வந்தார்.

இதற்கிடையே கடத்தப்பட்ட குழந்தை வளர்ந்து பெரியவளாகி 18 வயது நிரம்பிய நிலையில் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அதே பள்ளியில் படித்த ஒரு சிறுமி இவளது முக தோற்றத்தில் இருந்தாள்.

எனவே, உடன் படித்த இவளது தோழிகள் அந்த மாணவி உனது உடன் பிறந்த சகோதரியா? என கேட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அவள் இது குறித்து தனது பெற்றோரிடம் கூற அவர்கள் குழந்தையை கடத்திய பெண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

அப்போது, அவள் தனது மகள் என்றாள். அவளது பதில் திருப்தி அளிக்காததால் போலீசில் புகார் செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்தது. அப்போது டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் அவள் கடத்தப்பட்ட குழந்தை ஷெபானி நர்ஸ் என்று தெரிய வந்தது. அதை தொடர்ந்து கோர்ட்டு 18 ஆண்டுகளுக்கு பிறகு கடத்தப்பட்ட யுவதி ஷெபானி நர்ஸ் அவளது பெற்றோரிடம் ஒப்படைத்தது. மேலும் குழந்தையை கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

By

Related Post