Breaking
Fri. Jan 10th, 2025

பிளாஸ்டிக் தராசுகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தராசுகளை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் தராசுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்ட தராசுகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் இவ்வாறான தராசுகளே பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கொள்வனவு செய்யும்பொருட்கள் உரிய நிறையில் காணப்படுகின்றதா என்பதனை பரிசோதனை செய்யும் உரிமை நுகர்வோருக்கு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடு இருந்தால் 011- 2587199 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அளவீட்டு அலகுகள் தொடர்பிலான தர நிர்ணயசபை அறிவித்துள்ளது.

Related Post