-எச்.எம்.எம்.பர்ஸான்
தற்போதைய சூழலில் போதை வஸ்து பாவனையை அதிகம் அதிகம் பாவிக்கக் கூடியவர்களாக
நம் இளைய சமூகத்தினர் ஆளாகியுள்ளனர் இந்த விடயமானது நம்மத்தியில் மிகக் கவலை தரும் விடயமாகவுள்ளது. என்று பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி நேற்று முன்தினம் 17ம் திகதி மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மண்டபத்தில் கல்குடா கராத்தே விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
தொடர்ந்தும் அமைச்சர் பேசுகையில்,
போதை வஸ்து பாவனைக்கு அடிமையாகியுள்ள இளைஞர்களின் உடல் நிலை மிகவும் மோசமாகவுள்ளது 20 அல்லது 25 வயதில் போதைப் பாவனையால் சிறுநீரக நோய், இன்னும் பல நோய் தாக்கங்களுக்கு உள்ளாகி உயிர்களை இழக்கின்ற நிலைக்கு உட்படுகின்றார்கள். இது தொடர்பில் பெற்றோர் தங்களில் பிள்ளைகளின் விடயங்களில் மிகக் கவனம் செலுத்த வேண்டும் இல்லையென்றால் போதை தாக்கத்தால் இள வயதில் மரணத்தை அடைவதை தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
போதைப் பாவனைக்கு அடிமையாகிவுள்ள உங்கள் பிள்ளைகளை நீங்கள் மாற்றியமைத்து சமூகத்தின் நல்ல பிரஜைகளாக ஆக்க வேண்டும் என்றால் அவர்களை பொலிஸாரிடம் ஒப்டையுங்கள் பொலிஸார் அவர்களை சிறையில் அடைத்து தண்டனை வழங்க மாட்டார்கள் மாறாக அவர்களை சிறுவர் நன்னடத்தை பாடசாலைகளுக்கு அனுப்பி அவர்களுக்கு அங்கு கல்வி போதிக்கப் பட்டு அவர்கள் மாற்றியமைக்கப் படுவார்கள். இந்த விடயத்தில் பெற்றோர் கட்டாயம் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள பெரும் பெரும் முக்கியஸ்தர்கள் கூட போதை பாவனைகளுக்கு அடிமையான அவர்களுடைய பிள்ளைகளை இவ்வாறு சீர்திருத்தப் பாடசாலைகளுக்கு ஒப்படைத்து உள்ளார்கள். இது விடயத்தில் அரசாங்கமும் முழுக் கவனம் செலுத்தி வருகிறது எனவும் தெரிவித்தார்.
இன் நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.