Breaking
Thu. Dec 26th, 2024

– மட்டு.சோபா –

ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் கொலை தொடர்பில் சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ள தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்­சியின் தலை­வரும் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­ச­ரு­மான சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் உட்­பட நான்கு  பேரின் விளக்­க­ம­றியல் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­படி எதிர்­வரும் மார்ச்  9 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­ மன்ற நீதி­பதி எம்.கணே­ச­ராசா உத்­த­ர­விட்­டுள்ளார்.

கிழக்கு மாகா­ணத்தின் முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்சித் தலை­வ­ரு­மான சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன், தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்­சியின் முன்னாள் தேசிய அமைப்­பா­ளரும் முன்னாள் மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான பிரதீப் மாஸ்டர் என அழைக்­கப்­படும் எட்வின் சில்வா கிருஷ்­ணா­னந்­த­ராஜா, கஜன் மாமா எனப்­படும் கன­க­நா­யகம் மற்றும் இரா­ணுவ புல­னாய்வு உத்­தி­யோ­கத்தர் எம்.கலீல் ஆகி­யோ­ருக்கே விளக்­க­ம­றியல் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­போன்று தமிழ் மக்கள் விடு­த லைப் புலிகள் கட்­சியின் தலை­வரும் முன்னாள் கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச ­ரு­மான சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தனால் பிணை­மனு கோரி மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்றில் தாக்­கல்­செய்­யப்­பட்ட மனு­ வினை விசா­ர­ணை­செய்த மேல் முறை யீட்டு நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திர மணி விஸ்வலிங்கம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வழக்கினை ஒத்திவைத்தார்.

By

Related Post