Breaking
Sun. Dec 22nd, 2024
பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டுள்ள மணல் இன்று அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளின் மேற்பார்வையில் இத் தடாகத்தில் உள்ள மணல் அகற்றப்படவுள்ளது.

பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் முன்னாள் ஜனாதிபதியின் தங்கம் உள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் இந்த மணல் அகற்றப்படவுள்ளது.

இது குறித்து பிரபல வர்த்தகரும் தொழிலதிபருமான ஏ.எஸ்.பி. லியனகே பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.

இந்த தடாகத்தில் தங்கம் உள்ளதா என்பது குறித்து எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவிற்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அடுத்தே இந்த தடாகம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் உள்ள மணலை அகற்றுவதற்கான செலவினை ஏ.எஸ். பி.லியனகேயே ஏற்றுக்கொண்டுள்ளார்.

By

Related Post