Breaking
Fri. Dec 27th, 2024

கொழும்பு ஆனந்த மாவத்தையையும், கெட்டவலமுல்ல ஒழுங்கையையும் இணைக்கும் வீதிக்கு இன்று 19 ஆம் திகதி “பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாவத்தை” எனப் பெயரிடப்படவுள்ளது.

கொழும்பு மாநகர சபை உட்பட பல அரச நிறுவனங்கள் இப்பணியில் பங்கேற்கவுள்ளன. இது தொடர்பான வைபவம் அமைச்சர் கரு ஜயசூரிய தலைமையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பங்களிப்புடன் மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோட்பாட்டுக்கு இணங்க, இராணுவத்தை வீரத்துடன் வழி நடத்தியமையைக் கெளரவித்து இந்த பெயர் வீதிக்கு இடப்படவுள்ளது. அத்துடன் சரத்பொன்சேகா நாட்டின் பாதுகாப்பிற்காக தனது சொந்த வாழ்க்கையினை பொருட்படுத்தாது பல தியாகங்களை செய்து படைகளை வழிநடத்திய ஒருவாராவார்.

இந்த வீதிப் பகுதியில் இருந்த சட்டவிரோத வீடுகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக கிரேண்ட்பாஸ் பகுதியில் வீடுகள் மக்களுக்கு வழங்கப் பட்டுள்ளன. இன்றைய விழாவில் மேயர் ஏ.ஜே. எம். முஸம்மில் உட்பட பல பிரமுகர்களும் பங்குகொள்வர்.

Related Post