Breaking
Fri. Nov 15th, 2024

இந்திய மார்க்க அறிஞர் பி ஜெய்னுலாப்தீன் இலங்கை வரவுள்ள நிலையில் அவரை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என ஆசாத் சாலி வலியுருத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் கடந்த 2005ல் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களும் அப்போதைய பாதுகாப்பு செயலாலரும் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இன்று ரனிலின் அரசு அவர் நாட்டுக்குள் வந்து மார்க்க சொற்பொழிவு நடத்த அனுமதி அளித்துள்ளது.இலங்கைக்குள் இஸ்ரேல் நட்பு உயிர்பெற்றுள்ள நிலையில் பி ஜெய்னுலாப்தீன் இஸ்ரேல் சூழ்ச்சி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது என குறிப்பிட்ட அவர் …

SLTJ அமைப்பு பி ஜெய்னுலாப்தீனை இங்கு அழைத்துவருவதாவும் அவர்கள் தான் புத்தர் மனித மாமிசம் உண்டதாக சர்ச்சையை கிளப்பினார்கள் என சுட்டிக்காட்டிய அவர்…

அன்று பொது பல அளுத்கம பிரதேசத்தில் ஞானசார தேரர் கூட்டம் நடத்தினால் கலவரம் வெடிக்கும் என நான் கூறினேன் அது அவ்வாறு நடந்தது. அதேபோல் பி ஜெ இலங்கை வந்தால் நாட்டில் கலவரம் வெடிக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

By

Related Post