ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று மாலை நடைபெற்ற அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துவதற்காக பி.ஜே. இலங்கைக்கு வருகை தர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும் அவரது வருகை தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உட்பட இஸ்லாமிய நிறுவனங்கள் சிலவும் எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடுகளையும் முன்வைத்திருந்தனர்.
இந் நிலையிலேயே அவரது விஜயம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர் குறித்த நிகழ்வில் நேற்றிரவு இணையத்தளம் வழியாக நேரடி உரையாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைச் செயலாளர் எம்.எப்.எம்.ரஸ்மின் கருத்து வெளியிடுகையில்,
” சகோதரர் பி.ஜே. யின் இலங்கை விஜயம் தொடர்பில் முஸ்லிம் சமய விவகார அமைச்சும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் எழுத்து மூல அனுமதி வழங்கி இருந்தன. அவர்கள் எமது குர்ஆன் மொழி பெயர்ப்பு தொடர்பிலும் எந்தவித ஆட்சேபனைகளையும் தெரிவிக்கவில்லை.
இந்த ஆவணங்களை சமர்ப்பித்தே நாம் அவருக்கான விசாவுக்கு விண்ணப்பித்திருந்தோம்.
இதற்கமைய அவர் இலங்கை வருவதற்கான விசா அனுமதி குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்தது.
எனினும் அவரது வருகையை விரும்பாத ஒரு சில அரசியல்வாதிகளும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உள்ளிட்ட அமைப்புகளும் எதிர்ப்புக்களை வெளியிட்டதுடன் பாதுகாப்பு அமைச்சுக்கும் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர். மக்களை பிழையாக வழிநடாத்தும் வகையில் பொறுப்பற்ற அறிக்கைகளையும் விடுத்திருந்தனர்.
இதனையடுத்து பி.ஜே.யின் வருகைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் அறிவித்ததாக அறிகிறோம். இதன் பிரதிகள் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிவரவு குடியகல்வு அலுவலகம் மின்னஞ்சல் மூலமாக பி.ஜே. அவர்களுக்கு வழங்கப்பட்ட விசாவை இரத்துச் செய்யுமாறு தமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக எமக்கு அறிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் அல் குர்ஆன் சிங்கள தொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்வு பல சவால்களுக்கு மத்தியில் நேற்று மாலை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மிக விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் தலைவர் முஹம்மத் றியாழ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் வாதிகள் சட்டத்தரணிகள் உலமாக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனா்.
மாலை 4.15மணிக்கு ஆரம்பமான நிகழ்வின் ஆரம்ப நிகழ்ச்சியாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் தலைவர் முஹம்மத் றியாழ் தலைமை உரை நிகழ்த்தினார்.அதனைத்தொடர்ந்து துணைத்தலைவா் மௌலவி பா்ஸான் இளைஞா்களின் எதிர்காலம், துணைச்செயளாலா் மௌலவி ரஸ்மின் புரட்சிப்பாதையில் தௌஹீத் ஜமாத் என்ற தலைப்புகளில் உரையாற்றினார்..
அல் குர்ஆன் சிங்கள தொழிபெயர்ப்பாளரும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் செயலாளருமான அப்துா் ராஸிக் அல் குா்ஆன் ஏன் மொழி பெயா்க்கப்படவேண்டும் என்ற தலைப்பில் சிங்கள மொழியில் உரையாற்றினார்.
அதனைத்தொடா்ர்ந்து குர்ஆன் சிங்கள தொழிபெயர்ப்பு வெ ளியிட்டு வைக்கப்பட்டது.நூலின் முதல் பிரதியை ஜக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுா் ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.