Breaking
Mon. Dec 23rd, 2024

பிரதான மார்க்கங்களினுடனான புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்திருந்தது.

மீரிகம மற்றும் பல்லேவல ஆகிய பிரதேசங்களுக்கிடையில புகையிரதம் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டகளப்பில் இருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதத்திலே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரத கட்டுபாட்டு சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிரதான மார்க்கங்களினுடனான புகையிரதங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தற்போது புகையிரத போக்குவரத்து தடங்கல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோளாறுக்கு உள்ளான புகையிரதம் வெயங்கொடை புகையிரத நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

By

Related Post