Breaking
Mon. Dec 23rd, 2024

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 208B/2 பிரிவுக்குட்பட்ட புகையிரத கடவை மற்றும் அல் அக்ஸா வீதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

அல் அக்ஸா வீதி புனரமைப்பதற்கான பிரதி அமைச்சர் தனது அமைச்சின் நிதி 3.00மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதபோன்று நீண்ட காலமாக திருந்தப்படாமல் இருந்த ஹூதாபள்ளிவாயல் புகையிரத கடவை புனரமைப்பதற்காக 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் நெளபல், பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத், முன்னாள் பிரதேச சபை உதவித் தவிசாளர் நெளபல், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் புர்க்கான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , மற்றும் அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

15966199_1333652663363089_5938485617867391171_n 16002971_1333652723363083_8892372654316737219_n 16003078_1333652606696428_21944763818301164_n

By

Related Post