புகையிலை பொதியை வெள்ளை நிறத்தில் கவர்ச்சிகரமற்றதாக அமைக்கவும்,புகையிலை உற்பத்தி பொருட்களுக்கான வரியை 90 சதவீதத்தினால் உயர்த்தவும் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இலவசமாக இரத்த பரிதோதனைகளை செய்து கொள்ளவும் யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஔடத மருந்து விலை அறிக்கை 2 மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், இந்த திட்டத்தின் மூலமாக தரமான மருந்துகளை கொள்வனவு செய்யவும், மருந்து செலவீனங்கள், பயனற்ற மருந்து பாவனை மற்றும் மருந்துகள் காலாவதியாதல் போன்றவற்றினையும் குறைத்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு பகிர்தளிக்க புதிய மென்பொருள் செயற்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்.
இதே வேளை நாட்டில் சுகாதாரத்தினை வலியுருத்தும் பொருட்டு குளிர்பானம் மற்றும் உணவுப்பொருட்களில் உள்ளடக்கப்படும் சீனி, உப்பு போன்றவற்றின் தன்மைக்கேற்ப அவற்றின் விலைகளில் வரிகள் அதிகரிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தமை குறிப்பிட்டார்.