Breaking
Fri. Nov 15th, 2024

புகையிலை உற்பத்தி வரி அதிகரிப்பிற்கு எதிராக குரல் கொடுப்போர் பற்றி அம்பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு கோரியுள்ளது.

புகையிலை உற்பத்தி வரி அதிகரிப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வரும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே கோரிக்கை விடுத்துள்ளார்.

புகையிலை பொருள் அடங்கிய உற்பத்திகளுக்கான வரியை 90 வீதமாக உயர்த்துமாறு சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அறிவுறுத்தல் இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரி அதிகரிப்பினை அமுல்படுத்துவதற்கு சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஆர்வம் காட்டவில்லை என அண்மையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தார் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் கடிதம் ஊடாக தெரிவித்துள்ளார்.

வரியை உயர்த்துவதற்கான இயலுமை நாட்டின் ஜனாதிபதிக்கு கிடையாது என்றாலும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள அரச நிறுவனங்களுக்குச் செல்லும் சாதாரண பொதுமக்களின் நிலைமை என்ன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post