புதிதாக 10 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானங்கள் பிரிவிற்கு வலுச்சேர்க்கும் நோக்கிலேயே இந்த விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் டொக்டர் ரவீந்திர ருபேரு குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கென தற்போது 23 விமானங்கள் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.