Breaking
Wed. Mar 19th, 2025

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சுப் பதவிகளை பகிர்வது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக, கடந்த நாட்களில் நடைபெறவிருந்த இந்த நிகழ்வு பிற்போடப்பட்டு, கட்டம் கட்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் நாளை முதற்கட்டமாக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக 19 அமைச்சர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 16 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டாம் கட்டமாக அடுத்த வாரம் ஏனைய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 30 ஆக மட்டுப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது 45 வரை அதிகரிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி – உதயன்

Related Post