Breaking
Mon. Dec 23rd, 2024

– ஏ.எஸ்.எம்.இர்ஷாத் –

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டத்;தில் கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலையொன்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடசாலை நிர்மானித்துக் கொடுக்கப்படுமென நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்க உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இன்று புதன்கிழமை(12) நடைபெற்ற மௌலவிமார்கள், புத்திஜீவிகளுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீனும் பங்கேற்றிருந்தார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்க இங்கு உரையாற்றுகையில் கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் கடந்த அரசாங்கத்தில் இம்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்தார். கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் தேவைப்பாடுகள், பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் றிஷாத்  பதியுதீன் கூடிய கவனம் செலுத்தி வருகின்றார். இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்;கொடுக்குமாறு அடிக்கடி என்னிடம் கூறுவார். அத்துடன் இவ்விடயங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.
எதிர்வரும் 17ம் திகதிக்குப்  பின்னர் ஏற்படுத்தப்படும் எமது புதிய அரசாங்கத்தில் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரை வழங்கி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். குறிப்பாக கொழும்பு முஸ்லிம்களின் கல்வி நிலையை கருத்திற்கொண்டு கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலையொன்று நிர்மானித்து கொடுக்கப்படும் அதற்கான நிதி புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். அத்துடன் மாணவர்களின் பாடசாலை அனுமதி, பௌதீக வளங்கள், ஆசிரியர் பற்றாக்குறைகள் என்பவற்றுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். முஸ்லிம் மையவாடி பிரச்சினை தொடர்ந்தும் இருந்து வருகின்றது இதற்கும் நாம் உரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம் என்றார்.
அமைச்சர் றிஷாத் பதியுதீன் இய்கு உரையாற்றுகையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன, மத பேதமின்றி பணியாற்றக்கூடிய ஒருவர். நிதி அமைச்சர் என்ற வகையில் அவர் சமூகம் சார்ந்த பல கோரிக்கைகளை கவனனத்திலெடுத்து நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் நிலையை அவர்களின் பிரதேசங்களுக்கு சென்று நான் அறிந்துள்ளேன். இம்மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பின்தங்கியுள்ளது. சரியான வீட்டு வசதியில்லை, கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பு என அனைத்திலும் பின்தங்கியுள்ளனர். இவைகளை அரசியல்வாதிகளால்தான் நிறைவேற்றிக் கொடுக்க முடியும். எனவே அடுத்த புதிய அரசாங்கத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பார் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Post