Breaking
Mon. Dec 23rd, 2024
இலங்கையின் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் விசேட அமர்வில் நேற்று -11- இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்றுஉரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க குழுவின் தலைவருமான சந்திரிக்காகுமாரதுங்க, இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது சந்திரிக்கா, இலங்கை கடந்த பல வருடங்களாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியபோர் ஒன்றுக்கு முகங்கொடுத்ததாக குறிப்பிட்டார்.
போர் வெற்றி கொள்ளப்பட்டாலும் கூட நாட்டினால் சமாதானத்தைவெற்றி கொள்ள முடியவில்லை.
எனினும் இதனை முறியடிக்கும் வகையில் இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநோக்கத்தின் கீழ் தற்போது செயற்படுகின்றன. இதன் காரணமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பது இலகுவாகியுள்ளது.
பிரச்சினைகள் அனைத்தையும் இராணுவத்தை கொண்டு தீர்க்க முடியாது.இதற்கான பிரச்சினையின் அடிப்படை தீர்க்கப்பட வேண்டும்.
அத்துடன் இலங்கையின் மீது சர்வதேசம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று சந்திரிக்கா குறிப்பிட்டார்.
இதற்காகவே இலங்கை,ஐக்கிய நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக அவர்தெரிவித்தார்.
புதிதாக தயாரிக்கப்படும் அரசியலமைப்பில் நாட்டின் நான்கு இனங்களுக்கும் சமவுரிமைகள்வழங்கப்படவுள்ளன.
இந்த அரசியல் அமைப்பு தயாரிப்புக்காக எதிர்க்கட்சியும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் சந்திரிக்கா தெரிவித்தார்.

By

Related Post