Breaking
Sun. Dec 22nd, 2024

பல்லின, பல சமய, பல கலாசாரத்தை அடையாளமாக கொண்டுள்ள இலங்கை மக்களின் தேவைகளை உணர்ந்து அரசியலமைப்பு உருவாக்கப்படாமையே கடந்த இரு குடியரசு அரசியலமைப்புகளும் தோல்வியடைந்தமைக்கு காரணமாக அமைந்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் அதே தவறை மீண்டும் செய்யாது நாம் அனைவரும் ஒருமித்து வாழ்வதற்கான அடிப்படைகளை புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

மேலும் புதிய அரசியலமைப்புக்கான பிரேரணையை 2017 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதத்துக்கு நடைபெறுவதற்கு முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

By

Related Post