Breaking
Mon. Dec 23rd, 2024
SAMSUNG CSC

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆலோசனையின் கீழ் பிரதமா்

பாராளுமன்றத்தில் சமா்ப்பித்த புதிய அரசியலமைப்புக்கு ஸ்ரீ.ல.சு.கட்சியின் அரசியல் குழு அமைச்சா் மகிந்த மற்றும் பைசா் முஸ்தபா ஆகியோா்கள் கொண்ட குழு 9 திருத்தங்களை மேற்கொண்டு பிரதமரிடம் சமா்ப்பித்துள்ளது. அதனை அவா் ஏற்றுள்ளாா்.

பாராளுமன்றத்தின் இவை விவாதிக்கப்படும். அரசியலமைப்பு திருத்தம்

கொண்டுவரவோ தமது ஆலோசனையை சமா்ப்பிப்பதற்கு கடசிகள் தேவை இல்லை பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தனித்தனியாக சமா்ப்பிக்க முடியும்.

இங்கு உரையாற்றிய அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவித்தாா்.

நேற்று (13)ஆம் திகதி தகவல் தினைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா்

மாநாட்டிலேயே அமைச்சா்களானா பைசா் முஸ்தபா மற்றும் மகிந்த சமரசிங்க

அவா்கள் சமா்ப்பித்த மாற்று 9 அம்சங்கள் கொண்ட அரசியலமைப்பு பற்றி

தெளிவுபடுத்தினாா்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதித் தேர்தலின்போதே சர்வதிகார

ஜனாதிபதி முறை புதிய அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வருவேன் சகல அதிகாரங்களையும் பாராளுமன்ற பிரதமரிடம் ஒப்படைப்பேன் என்று கூறினாா்.

அவருக்கு இந்த நாட்டில் உள்ள ரீ.என். ஏ. ஜே.வி.பி முஸ்லீம் பௌத்த

கட்சிகள் வாக்களித்துள்ளனா். அவா் கொடுத்த வாக்குறுதியே அவா் தற்போது

செய்கின்றாா். ஜே.ஆர் ஜெயவா்த்தன கொண்டு வந்த அரசியலமைப்பில் அவர் தொட்டு அதன் பிறகு வந்த எந்தவொரு ஜனாதிபதியும் ஜனாதிபதிக் கதிரையில்

அமா்ந்தவுடன் தனது அதிகாரங்களை விட்டுக் கொடுக்க வில்லை ஆனால்

மைத்திரிபால சிறிசேனா தனது பதவி அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு

வழங்குகின்றாா். இந்த நாடு பொளத்த கொள்கையை அரசியலமைப்பு ஊடகா யாரும் மாற்ற முடியாது அதில் மாற்றம் இல்லை அவ்வாறு மாற்றுவதென்றாலும் சர்வஜன வாக்கெடுப்பு முலமே மாற்ற முடியும். ஆனால் சிலா் மேடை அமைத்து தற்போதைய அரசு பெளத்த கொள்கையை மாற்றுவதாக இனவாத கருத்துக்களை மக்களிடம்

சொல்லுகின்றனா்.

ஏற்கனவே பிரதமா் உட்பட 12 பேர் கொண்ட அரசியலமைப்பு சபை

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் கூடி சமா்ப்பித்த

யோசனையில் ஸ்ரீ.ல..சுதந்திரக் கட்சி 9 திருத்தங்களை சோ்த்து ஒரு மோசனை

பிரதமரிடம் பாராளுமன்றத்தின் ஊடாக சமா்பித்துள்ளோம். அதில் இந்த

நாட்டில் சகல இனம், ஜக்கியம், மத, மொழி, கலாச்சாரம் போன்ற விடயங்கள்

கொண்ட சகல இனமும் ஜக்கியமாக வாழக்கூடியதாக இந்த அரசியலமைப்பு

சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பௌத்த மதத்திற்கோ இனத்திற்கோ எவ்வித

பாகுபாடு இல்லை. ஆனால் பாராளுமன்ற உறுப்பிணா் திணேஸ் குணவா்த்தன அரசிய லமைப்பு 86, மற்றும் 130 சா்த்தினை சோ்த்து அவரும் ஒரு திருத்தத்தை

பாராளுமன்றத்தில ்சமா்ப்பித்துள்ளா்ா. எந்த வொரு பாராளுமன்ற உறுப்பினரும் திருத்தங்களை சமா்ப்பிக்க முடியும். ஆனால் இந்த புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பொரும்பான்மையினால் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னா் அமைச்சரவையில் சமா்ப்பிக்கப்பட்டு அதன் பின்னா் நீதி

ஆலோசனை பெறப்படல் வேண்டும். இல்லாத விடத்து சர்வஜன வாக்கொடுப்பு தேர்தல் நடத்தப்பட்டு தான் இந்த புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்படல் வேண்டும். என அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவித்தாா்.

ஆனால் பாராளுமன்றத்தினை விட ஜே.ஆர். ஜெயவா்த்தன கூட சர்வஜன

வாக்கொடுப்பில் கொண்டுவந்த அரசியலமைப்பை மாற்ற முடியாது. அதனை

மாற்றுவதென்றால் கட்டாயம் சர்வஜன வாக்கொடுப்புக்கு விடப்பட்டு வெற்றி

பெற்றால் மட்டும் தான் இதனை அமுல்படுத்த முடியும். இதற்காக

பாராளுமன்றத்தில் எதிா்கட்சியில் உள்ள மகிந்த குழு எதிராக பிரச்சாரம்

செய்யுமா என்று பொறுத்து இருந்து தான் பாா்கக் வேண்டும். எனது அமைச்சின்

எல்லை நிர்ணயம் உள்ளுரா்ட்சி முறை பற்றி உதயன் கம்மன்வில ஏதாவது

பிழைகள் கண்டால் அவருக்கு உயா் நீதிமன்றத்தில் வழங்கு தாக்கல் செய்ய

முடியும். அதனை விட்டுவிட்டு அவா் விவாதற்கு அழைப்பது அவரது கோழைத்தனம்.

அவரும் சட்டத்தரணி நானும் ஒரு சட்டத்தரணி நான் அரசியலமைப்பு

சட்டத்தின்படியே எனது காரியங்களை செய்கின்றேன் என அமைச்சா் பைசா் முஸ்தபா தெரவித்தாா்.

By

Related Post