கடிகாரத்தை சுயமாக தயாரித்து பள்ளிக்கு எடுத்து வந்த முஸ்லிம் சிறுவனை, வெடி குண்டை கொண்டு வந்திருப்பதாக கருதி அந்த சிறுவனின் கையில் விலங்கு மாட்டியது ஒரு அமெரிக்க கல்விகூடம்.
பிறகு அந்த தவறு சரி செய்ய பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமாவே அந்த சிறுவனை அழைத்து உபசரித்து உற்சாகபடுத்தினார்.
அந்த சிறுவன் அஹ்மது, தற்போது அவனது குடும்பத்தோடு சவூதி மன்னர் சல்மானின் விருந்தாளியாக மக்காவிற்கு உம்ரா செய்ய வந்துள்ளான்.
சிறுவன் அஹ்மது சவூதி அரேபியாவில் ரியாத் நாளேடுக்கு பேட்டி கொடுக்கும்போது:-
“எதிர்காலத்தில் மின்சாரத்தை உலக மக்கள் இலவசமாக பயன்படுத்தும் பொருட்டு மிக மிக குறைந்த மதிப்புடைய பொருள்களில் இருந்து மின்சாரத்தை தயாரித்து உலக மக்களுக்கு வழங்குவதே எனது இலக்காகும் அதற்கான ஆய்வு பணிகளில் இப்போதே நான் இறங்கிவிட்டேன்.
“எனது அந்த கண்டுபிடிப்பு வெற்றி பெற்று நடைமுறைக்கு வருகின்றபோது உலக மக்கள் மின்சாரத்தை எந்த கட்டணமும் இல்லாமல் பயன் படுத்தும் சூழல் உருவாகும்.” – என்று சிறுவன் அஹ்மத் தனது பேட்டியில் தெரிவித்துள்ளான் .
இளம் விஞ்ஞானி அஹ்மத் தனது முயற்ச்சியில் வெற்றி பெற இறைவனிடம் நாமும் பிரார்திப்போம்.