Breaking
Tue. Dec 24th, 2024
புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கை விரல் அடையாளம் மற்றும் டிஜிடல் புகைப்படத்தின் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ள புதிய கடவூச் சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளார் நாயகம் எம்.என் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார் .
ஒரே நாளில் கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்கு 3500 ரூபாவும் சாதாரண முறையில் பெற்றுக் கொள்வதற்கு 1500 ரூபாவும் பெற்றுக் கொள்வதாகவும் எம்.என் ரணசிங்க தெரிவித்துள்ளார் .
இதேவேளை வெளிநாட்டு கடவுச் சீட்டுகளை விநியோகிப்பதற்கான கருமபீடங்களை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
அதற்கமைய 16 கருமபீடங்கள் தற்போது 32 கருமபீடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளார் நாயகம் எம்.என் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related Post