Breaking
Sat. Jan 11th, 2025

பழுலுல்லாஹ் பர்ஹான்

சர்வதேச சிறுலர் தினத்தை முன்னிட்டு புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை நடாத்திய 2014 பாலர் விளையாட்டு விழா 31-10-2014 நேற்றுவெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை மற்றும் புதிய காத்தான்குடி அபிவிருத்தி மத்திய குழு ஆகியவற்றின் தலைவரும்,நகர சபை உறுப்பினருமான எம்.எச்.எம்.பாக்கீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்;டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்;புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது பல்வேறு பாலர் விளையாட்டுக்களில் பங்குபற்றிய சிறுவர்களுக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியைகளுக்கும் அதிதிகளினால் விருதும்,பரிசும்,சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர்,ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) உட்பட ஊர் பிரமுகர்கள், ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை ,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.10402896_1486179758336543_3363148104456849614_n 10615492_1486179558336563_7724771408248391789_n 10407015_1486179835003202_3333709318847471294_n 10426302_1486180078336511_2454115077749267415_n 10404169_1486179728336546_2459765267935779570_n

Related Post