பௌத்த தேரர்களின் குரலை ஒடுக்குவதற்காகவே அரசாங்கத்தினால் புதிய ஒழுக்க விதிகளை உள்ளடக்கி, சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எஹெலியகொட பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பௌத்த பிக்குகளின் நடத்தை குறித்து ஒழுக்க விதிகள் உள்ளடக்கிய சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் தயாராக இருகிறது.அது மீளாய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.
அவ்வாறு இல்லாவிட்டால், தேரர்களுக்கிடையிலும் பொதுமக்களுக்கிடையிலும் பாரிய எதிர்ப்பு உருவெடுக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை,பௌத்த பிக்குகளின் ஒழுக்கங்களை உறுதி செய்யும் வகையில் அரசாங்கத்தால் அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச சட்டத்தை தொடர்ந்தும் பொதுபல சேனா உள்ளிட்ட பல அமைப்புகளும் எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.