நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமுர்த்தி உரித்துப் படிவம் வழங்கும் வைபவம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலும் வழங்கி வைக்கப்பட்டன.
வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துப் படிவமு இன்று (18) கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களால் வழங்கப்பட்டன
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு உரித்து பத்திரங்களை வழங்கி வைத்தார் .
ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் தேசிய திட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் இது வரைக்கும் 4268 புதிய சமுர்த்தி பயனாளிகள் தகுதி பெற்று ஆரம்ப வைபவத்தில் பத்திரங்களை பெற்றுள்ளனர்.
மேலும் பலர் எதிர் காலத்தில் இணைத்து கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தெரிவித்தார்.
இக் குறித்த ஆரம்ப வைபவத்தில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.மஹ்தி,நிஸார்தீன் முஹம்மட். நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.முஹ்சின், கிண்ணியா வலய முகாமையாளர் எம்.பி ஹில்மி, குறிஞ்சாக்கேணி வலய முகாமையாளர் எம்.ஏ.எம்.றிஸ்வி உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.