வவுனியா, புதிய சாளம்பைக்குளம், றவ்ழத்துள் ஜன்னா பாலர் பாடசாலையின் விடுகை விழா இன்று (17) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.
இதன்போது, கட்சியின் பிரதித் தவிசாளர் முத்து முகம்மட் ஆசிரியர், வவுனியா மாவட்ட உலமா சபைத் தலைவர் ஜுனைட் மௌலவி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் றஹீம், விவாகப் பதிவாளர் ஜவாஹிர் மற்றும் நிஹ்மதுல்லாஹ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.