Breaking
Sun. Dec 22nd, 2024

இரண்டு கோடி மக்களால் நிரப்ப முடியாத பாராளுமன்றம் அவர்கள் சார்பான 225 உறுப்பினர்களால் நிரப்பப் பட்டுள்ளது. எனினும், அப்பாராளுமன்றின் ஜனநாயகம் மற்றும் நன்னடைத்தை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டிய பொறுப்போடு புதிய சபாநாயகர் தெரிவாகியுள்ளார் என தெரிவித்தார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.

கடந்த பாராளுமன்றில் ஒரு சிலர் தமதுரைகளின் போது நடந்து கொண்ட விதங்களைப் பார்க்கும் போது பாராளுமன்றுக்குள் பாடசாலை மாணவர்களை இனியும் அனுமதிக்க முடியுமா எனும் கேள்வியெழுந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வாறு பெரும் சவால்களுக்கு மத்தியில் புதிய பாராளுமன்றினை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அவர் வேண்டுகோள் முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post