Breaking
Mon. Dec 23rd, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

இந்த நாட்டின் 40 இலட்ச சாதாரண குடும்பங்களும் தங்கள் பொருளாதாரத்தினை வெற்றி கொள்வதற்காக புதிய பொருளாதார செயற்திட்டத்தினை அறிமுகப்படுத்துள்ள உள்ளதாக பிரதியமைச்சா் காலநிதி ஹா்ச டி சில்வா தெரிவித்தாா்.
அவா் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

அறிவை அடிப்படையாகக் கொண்ட போட்டிமிக்க சமுக சந்தைப் பொருளாதார முறை ஒன்றின் மூலம் உலக சந்தையை வென்று சூழலினையும் பாதுகாத்துக் கொள்வதுடன் அரசியல் சமுக. மற்றும் பொருளாதார சமத்துவத்தினைக் கொண்ட நல்லாட்சி ஒன்றினை உருவாக்கி இந்த இலக்கினை வெல்லமுடியும் என ஹா்சா டி சில்வா பம்பலப்பிட்டியில் உரையாற்றினாா்.

சர்வதேச கீா்த்தியை பெற்ற பொருளாதாரத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றவரும் பொருளாதார திட்டமிடல் பிரதியமைச்சரும் கொழும்பு மாவட்டத்தில் ஜ.தே.கட்சியில் போட்டியிடுபவருமான கலாநிதி ஹா்சா டி சில்வா பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவிலில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டாா்.

சர்வதேச கீா்த்தியைக் கொண்ட கலாநிதி ஹா்ச அமேரிக்கா பல்கலைக்கழகத்தின் கலாநிதி பட்டம் பெற்றவா். கொழும்பு ரேயல் கல்லுாாியின் பழைய மாணவா்.

Related Post