ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் இளவரசர் சையத் அல் ஹுசைனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
கண்டியில் 1-9-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய ஆணையாளரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக முடிவுகளை எடுத்திருப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர், புதிய ஆணையாளர் அவ்வாறு நடந்து கொள்ளமாட்டார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 6 வருடங்களாக ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக பணியாற்றி வந்த நவநீதம்பிள்ளை நேற்று பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதனையடுத்து, புதிய ஆணையாளராக ஜோர்தான் நாட்டின் இளைவரசர் சையத் அல் ஹுசைன் தனது பணிகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.