தி/கிண்ணியா குறிஞ்சாக்கேணி மகளிர் மகாவித்தியாலயத்தின் தரம் ஒன்றுக்கான 2019 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு இன்று (17) வியாழக்கிழமை அதிபர் எஸ்.டி.நஜீம் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது பாடசாலை வளாகத்தில் அமையப் பெற்றுள்ள புதிய நவீன வகுப்பறை கட்டிடம் (Smart Class Room) வகுப்பறையும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்
தனது வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் அதிகமான நிதியை கல்விக்காகவே ஒதுக்கியுள்ளேன் 23 வீதத்துக்கும் அதிகமான நிதியை கல்விக்காக ஒதுக்கியுள்ளேன். புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகளின் போது பல குறைகள் இலங்கை கல்வியின் திட்டங்களில் காணப்படுகிறது நகர கிராம புறங்களில் ஒரே வெட்டுப் புள்ளி விகிதமே காணப்படுகிறது இது கல்வியில் பல பின்னடைவுகளை ஏற்படுத்துகிறது என்றார்.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் உட்பட கிண்ணியா வலயக் கல்வி ஆரம்பக் கல்வி பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.சமீம், கிண்ணியா மக்கள் வங்கி முகாமையாளர் எம்.எம்.நியாஸ் ,கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் ,கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி ,பெற்றார்கள் என பலரும் பங்கேற்றார்கள்.