Breaking
Thu. Jan 9th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக்குழு பிரதித் தலைவருமாகிய அப்துல்லாஹ் மஹ்றூபின் முயற்சியில், சேருவில பிரதேச சபை உறுப்பினர் அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க, வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவின் பணிப்புரைக்கமைவாக 50 வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (13) செல்வநகரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அப்துல்லா மஹ்றூப் எம்.பி, மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ் மற்றும் ஹுசைன் ஜெஸீலா மற்றும் வீடமைப்பு அதிகார சபை மாவட்டப் பணிப்பாளர், கணிய மணல் கூட்டுத்தாபன நிறைவேற்றுப் பணிப்பாளர் றெஸ்ஸாக்(நளீமி), கிராம உத்தியோகத்தர், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட  பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

(ன)

Related Post