Breaking
Mon. Dec 23rd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட புதுகுடியிருப்பு வட்டாரத்தின், மன்/புதுகுடியிருப்பு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது.

அத்துடன், கடந்த ஆண்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் இப்பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை நுழைவாயில் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரமும் இன்று அதிதிகளால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்,  மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம் முஜாஹிர்,  மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன், வடமாகாண இளைஞர் சேவை பணிப்பாளர் முனவ்வர், மன்னார் கல்விப் பணிப்பாளர் செபஸ்தியான் குருஸ், பாடசாலை அதிபர் பஸ்மின், மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களான ராசிக், இன்சாப் மற்றும் சமுர்த்தி அதிகாரிகளான அஜூவா, அஸ்ரின், புதுகுடியிருப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் ரில்வான் உட்பட பள்ளித் தலைவர், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும்  கலந்துகொண்டனர்.

(ஐ)

Related Post