பீகார் மாநிலம் மேற்கு சம்பாரன் மாவட்டம் கதரி கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் ‘அப்ரோஸ் ஆலம்’ புத்தகம் வாங்க பணம் இல்லாமல் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவனாக இருந்தாலும், கூலித்தொழிலாளியான தந்தையால் புத்தகம் வாங்க 1500 ரூபாய் பணம் கொடுக்க முடியாததால் விரக்தியடைந்த அப்ரோஸ் ஆலம் தனக்கு தானே தீ வைத்துக் கொளுத்திக் கொண்டு இறந்து போய்விட்டான்.
மேற்படி தகவலை உறுதி செய்த காவல்துறை அதிகாரி சமரத் தீபக் செய்தியாளர்களிடம் கூறும்போது:
பரீட்சை நெருங்கிவிட்ட சூழலிலும், புத்தகம் வாங்கி படிக்க வசதியில்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக,அப்ரோஸ் ஆலம் மிகவும் சோர்ந்து காணப்பட்டதாக,
மேற்படி கிராம மக்கள் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் அதிகாரி தீபக் தெரிவித்தார்.
அப்ரோசின் தந்தை பெயர் அலி திவான் கூலித்தொழிலாளி, தாயார் சம்தாலி காத்தூன்.