Breaking
Tue. Dec 24th, 2024

– ரஸீன் ரஸ்மின் –

பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தேசியப்பட்டியல் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாகவே காணப்படுகிறது. முன்னார் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனவர்களுக்கு தேசியப்பட்டியல் மூலம் சந்தர்ப்பம் வழங்க மாட்டாது என தேசிய அரசியலில் பேசப்பட்டு வந்ததை யாவரும் அறியாமலிருந்திருக்க மாட்டீர்கள்.

ஆனால், தேர்தல் முடிந்த நிலையில், தோற்றுப் போனவர்களுக்கு மீண்டும் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களை விட தோற்றுப் போனவர்கள் தமக்கு நெருக்கமான ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு தேசியப்பட்டிலுக்காக கூடாரங்கள் அமைத்துக் காத்திருந்த கதைகளும் இருக்கவே செய்கின்றன. எனவே, இந்த தேசியப்பட்டியல் விவகாரங்களினால் கட்சியின் தலைமைகளுக்கும், உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகளும் ஏற்படுவது ஒர சாதாரன விடயமாகப் பார்க்கப்படுகிறது.

ஒரு கட்சிக்கு வழங்கப்படுகின்ற ஒன்று அல்லது இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களை எந்த மாவட்டத்திற்கு பிரித்துக்கொடுப்பது என்பதில் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பது என்பது தொடர்பில் கட்சியின் தலைவர்கள் படும் வேதனையை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
அவ்வாறானதொரு பெரும் இன்னல்களை இந்த தேர்தலுக்குப் பின்னரான தேசியப்பட்டியல் நியமனத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் எதிர்நோக்கியுள்ளமையை ஊடகங்கள், சமூக வளைத்தளங்கள் ஊடாக அறிந்திருப்பீர்கள்.

சரி, பிழைகளுக்க அப்பால் கட்சி, சமூகம் சார்ந்த சில விடயங்களை முன்வைக்கலாம் என இக்கட்டுரையின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தளம், வன்னி, குருநாகல், அநுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, ஆகிய அறு மாவட்டங்களில் ஐக்கிய தேசியக்கட்சியுடனும், அம்பாரையின் தனித்தும் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிஸ் எட்டு ஆசனங்களை பெற்று இரண்டு போனஸ் ஆசனங்கள் உள்ளடங்களாக பத்து ஆசனங்களுடன் புதிய பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் என கட்சியின் தலைவர், அமைச்சர் ரிசாத் பதியுதீன் தேர்தல் காலங்களில் மேடைகளில் தெரிவித்து வந்தார்.

உண்மையில் வன்னி மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களும் ஏனைய ஆறு மாவட்டங்களில் தலா ஒரு ஆசனங்களுமாக இந்த கட்சிக்கு எட்டு ஆசனங்கள் கிடைக்கும் என்றே கட்சியின் தலைவர் மாத்திரமின்றி, செயலாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் அனுமானித்து வைத்துள்ளனர்.

எனினும் துரதிஷ்ட வசமாக ஒரு சில குறிப்பிட்ட வாககுகளினால் வன்னி, அம்பாரை, குருநாகல், புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு ஆசனங்கள் கிடைக்காமல் போய்விட்டது. அநுராதபுரம், வன்னி, திருமலை, மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்கள் சார்பில் சான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருக்கிறார்கள்.
இந்த நான்கு உறுப்பினர்களுடன் ஒரு போனஸ் ஆசனமும் ஐக்கிய தேசியக்கட்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, போனஸாக வழங்கப்பட்ட ஆசனத்தை யாருக்கு பங்கீடு செய்வது இதுதான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவம் முகம்கொடுத்த பெரும் சவாலாகும்.

குறித்த ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு எத்தனை பேர் பந்தாடுவது. ஆந்த ஒரு ஆசனத்திற்கு பல பார்வைகள் விழுகின்றன. கடந்த பத்து வருடங்காக கட்சியின் செயலாளராக இருக்கின்ற வை.எல்.எஸ்.ஹமீட், மு.கா கட்சியிலிருந்து மக்கள் காங்கிரஸூடன் இணைந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், வன்னியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் முசலிப் பிரதேச சபைத் தவிசாளர் எஹியான்பாய் , குருநாகலில் போட்டியிட்ட டாக்டர் ஷாபி, புத்தளத்தில் போட்டியிட்ட நவவி ஆகியோர் மற்றும் அவர்களது சார்பில் தேசியப்பட்டிலுக்காக கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

எனினும் இதுகுறித்து கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தீர்க்கமானதொரு முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருந்தார். தேசியப்பட்டியலுக்காக கோரிக்கை விடுத்திருப்பவர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள், முக்கிய பதவிகளை வகிப்பவர்கள்.

எவ்வாறாயினும் தேசியப்பட்டியலுக்காக அவசரமாக பெயர்களை முன்மொழிய வேண்டியது அவசரமாக இருந்தது. இதன் காரணமாக புத்தளத்தைச் சேர்ந்த மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் வடமேல் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எச்.எம்.நவவியின் பெயர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் முன்மொழியப்பட்டது.
இவ்வாறு குறித்த பெயர் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருக்காக முன்மொழியப்பட்டதை அடுத்தே கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நியமிக்கப்படவுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டதுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்ட புத்தளம் எம்.எச்.எம்.நவவி ஒன்பதாவது இடத்தில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இதற்கிடையில், குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்தை கட்சியின் தலைவர் தனக்கு வழங்குவார் என் ஒரே எதிர்பார்ப்புடன் இருந்த செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் இறுதியில் ஏமாற்றத்துடன் கட்சியின் தலைவரோடு அதிருப்தி அடைந்து கட்சியன் தலைவரை நீக்கிவிட்டதாக இணையத்தளங்கள் மற்றும் சமூக வளைத்தளங்கள் ஊடாக செய்திகள் தீயாக பரவ ஆரம்பித்தன.

இதற்கிடையில் கட்சியின் தலைவர் எடுத்த தீர்மானம் சரியே என அம்பாரையில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
ஆத்துடன், சனிக்கிழமை 22ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்துகொண்டு தலைவரின் முடிவுக்கு தாம் கட்டுப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

கட்சி சார்பில் குருநாகல் மற்றும் அம்பாரை மாவட்டங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டு தோல்வியை சந்தித்திருந்தாலும் இரு மாவட்டங்களுக்கும் பொறு;பபாக இரு பாரளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளன.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்படும் நவவி அவர்கள் குருநாகலுக்கும் பொறுப்பாகவே இருப்பார். அதுபோல மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி அம்பாரைக்கு பொறுப்பாக செயற்படுவார் என அமைச்சர் ரிசாத் பதியுதீனால் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆத்துடன், கட்சியின் தலைமை மற்றும் அமைச்சர் என்ற வகையில், தானும் அம்பாரை மக்களின் நலன்களில் விஷேடமாக கவனம் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குறிப்பிடிருக்கிறார்.

1989ஆம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சர் மர்ஹூம் நெய்னா மரிக்கார் அவர்கள் அரசியலில் இரந்து ஓய்வு பெற்றதையடுத்து, நடைபெற்ற அத்தனை பொதுத் தேர்தல்களிலும் புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் தமக்குரிய பிரதிநிதித்துவத்தை இழந்து வந்துள்ளனர்.

இதனால் புத்தளம் மக்கள் பட்ட துன்பங்கள் பற்றி எழுத்தி; சொல்லி புரிய வைக்க முடியாதவையாகும். தமக்குரிய அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாமல் அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு உள்ளிட்ட அத்தனை விடயங்களிலும் புத்தளம் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கே.ஏ.பாயிஸ் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. மட்டுமன்றி, அப்போது கால்நடைவளப் பிரதி அமைச்சராகவும் இருந்து தன்னால் முடிந்த பணிகளை புத்தளத்து மக்களுக்காக முன்னெடுத்து வந்துள்ளார்.

அதன்பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் பாயிஸ் மாத்திரமன்றி, யாரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை. அதன் பின்னர் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட எம்.எச்.எம்.நவவி சொற்ப வாக்குகளினால் பாராளுமன்றம் செல்லும் தகுதியை இழந்திருந்தார்.

எம்எச்.எம். நவவி புத்தளம் மாவட்டத்திலேயே மூத்த அரசியல்வாதி, சுமார் முப்பது வருட காலங்கள் அரசியலில் அனுபவம் கொண்டவர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் முதல் அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர் இந்த பொதுத் தேர்தல் வரை கட்சி மாறாது கட்சிக்கும், கட்சியின் தலைமைக்கும் விசுவாசமாக இருந்து வந்துள்ளார்.

அதுபோல அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், கட்சியின் தலைவருக்கும் விசுவாசமாக இருப்பதுடன், அமானிதமாக வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் மிகவும் கண்ணியத்துடன் மக்களுக்காக செயற்படுவார் என நம்புகிறோம்.

புத்தளத்தைச் சேர்ந்த நவவிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியமையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடம், முக்கியஸ்தர்கள், கட்சிப் போராளிகள், மாவட்ட அமைப்பாளர்கள் என பலதரப்பட்டவர்கள் மனப்பூர்வமாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இடம்பெயர்ந்து புத்தளத்திற்கு சென்ற வடபுல முஸ்லிம்களை மிகவும் கௌரவத்துடன் வரவேற்று அவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் பெற்றுக்கொடுத்து, தமது வளங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்ட புத்தளம் மாவட்ட முஸ்லிம் சமூகம் 26 வருடங்களாக அரசியல் பிரதிநிதித்துவமின்றி எல்லா சந்தர்ப்பங்களிலும் பின்தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இதுவரைகாலமும் ஒரு இனத்திடம் அடிமைச் சமூகமாக வாழும் புத்தளம் மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக அரசியல் பிரதிநிததித்துவம் வழங்கியிருப்பது மிகவும் கௌரவத்துடன் பார்க்க வேண்டும்.

ஆத்துடன், அம்பாரையில் போட்டியிட்ட வேட்பாளர்களும், தேசியப்பட்டியலுக்காக பெயர் குறிப்பிடப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்;பினர் ஜெமீல் ஆகியோர் கட்சியின் தலைவர் எடுத்த முடிவுக்கு கட்டுப்பாட்டிருக்கிறார்கள். அதுதான் உண்மையான போராளியாகும். கட்சிக்கும், கட்சியின் தலைவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் துணையாக இருப்பதே கட்சிப் போராளியின் கடமையாகும்.
எனவே, அரசியலில் 26 வருடங்களுக்கும் மேலாக அரசியலில் அநாதையாக இருக்கின்ற புத்தளத்து முஸ்லிம் மக்களின் நலன்களுக்காக அ.இ.ம.கா கட்சிக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் ஆசனத்தை வைத்துக்கொண்டு கட்சிக்குள் பிளவுபடுவது கட்சியின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு குறுகிய காலப்பகுதியில் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தக்கட்சி இன்று ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறது. இந்தக்கட்சியின் வளர்ச்சியைக் கண்டு கையில் வாயை வைக்குமளவுக்கு இதன் வளர்ச்சி மிகவும் வேகமாக சென்று கொண்டிருப்பது உண்மையில் கட்சியின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது.

எனவே, கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு இன்று தேசியப்பட்டிலுக்கு ஆசைப்பட்டவர்கள் கட்சியின் நலனுக்காக சந்தோஷத்துடன் விட்டுக்கொடுத்துள்ள போது கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பத்து வருடங்களாக பணியாற்றிய செயலாளர் ஒரு தேசியப்பட்டியலை குறிவைத்து முரண்பட்டுக் கொண்டிருப்பது கட்சியை நம்பியிருக்கும் போராளிகள் மற்றும் அங்கத்தவர்களின் உள்ளங்களில் வேதனையை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.

Related Post