Breaking
Sun. Mar 16th, 2025

புத்தளத்தில் உள்ள 08 பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை அமைப்பதற்கு 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதாக புத்தளம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான M.H.M.நவவி அவர்கள் தெரிவித்துள்ளார்.

“புத்தளம் தொகுதிக்குள் 39 பாடசாலைகளுக்கு போதிய கட்டட வசதிகள் இல்லை . இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முதல்கட்டமாக எட்டு கட்டட்டங்களுக்கே மேற்கூறப்பட்ட நிதியான 120 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளோம். மாணவர்களின் கணினி அறிவை வளர்க்கும் வகையில் அதற்கான எட்டு நிலையங்களை ஆரம்பிக்கவும் உள்ளோம். இதன் முதல் கட்டமாக 1000 மாணவர்களுக்கு நூறு நாள் பயிற்சி வழங்கவுள்ளோம்” என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி  தெரிவித்தார்.

By

Related Post