Breaking
Thu. Dec 26th, 2024

வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீனின்வழிகாட்டலில் எதிர்வரும் 27.11.2016 அன்று புத்தளத்தில் மாபெரும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன .

இதற்கான நெறிப்படுத்தலை புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான அல்ஹாஜ் M.H.M. நவவி  ,  A.R.M.அலி சப்ரி  , முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான S. ஆப்தீன் எஹியா ஆகியோர் ஒழுங்கு படுத்தி உள்ளனர் .

”புத்தளமே விழித்தெழு” எனும் தாரக மந்திரத்தோடு இடம்பெறும் இந்த நிகழ்வு காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை வரை தொடர்கிறது .

*காலை 8.00 மணிக்கு ஜனாதிபதி, விஞ்ஞான கல்லூரிக்கு சுற்றி மதில் அமைக்க அடிக்கல் நாட்டுதல் .

*காலை 9.00 மணிக்கு புத்தளம் 6ம் கட்டை (இஸ்மாயில் புரம்) பாதைக்கு அடிக்கல் வைத்தலும் கட்சி காரியாலயம் திறப்பு விழாவும் .

*காலை 10.30 மணிக்கு கருத்தீவு கிராமத்தின் ஆழ்கிணறு திறப்பு விழாவும் , கட்சி காரியாலயம் அமைத்தலும் .

*மதியம் 2.00 மணிக்கு சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது .

இதிலே கடந்த உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைகழகம் தெரிவான மாணவர்களும் , கடந்த சாதாரண தரப்பரீட்சையில் உயர் சித்தி அடைந்த மாணவர்களும் , கல்விக்கு தன்னை அர்ப்பணம் செய்தோரும் கௌரவிக்க படவுள்ளனர் . ஒரு அரசியல் கட்சி இவ்வாறான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து இருப்பது புத்தளத்தில் இதுவே முதல் சந்தர்ப்பம் ஆகும் .

இது தவிர்த்து நிகழ்ச்சி நிரலுக்குள் உட்படுத்த படாத சில நிகழ்வுகள் நடைபெற இருப்பதும் ஒரு விஷேட அம்சம் ஆகும் .

இன , மத பேதங்கள் , கட்சி வேறுபாடுகள் கடந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நடத்தும் இந்த நிகழ்வு இன்று மக்களின் பேசு பொருளாக மாறி வருவதை காணக்கூடியதாய் இருக்கிறது .

எந்த வித ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் இடம்பெறவுள்ள ”புத்தளமே விழித்தெழு”எனும் மகுடம் பலரின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை .

உங்கள் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு அன்பாய் அழைக்கிறோம் .

By

Related Post