நேற்று (2017-03-17) புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயளகத்தில் புத்தளம் நீர் விநியோக மைய அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள், பிரதேச செயலாளர் ஆகியோருடனான முக்கிய சந்திப்பொன்றை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் நடாத்திருந்தார்.
புத்தளம் நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளுக்கு சுமார் 5000 கன அடி நீர் தேவைப்படுகின்றது. சுமார் 2000 பேர் நீர் தேவைக்காக பணம் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கலா ஓயா’வில் இருந்து புத்தளத்திற்க்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பூரணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் ஒரு சில தடைகள் காரணமாக இத்திட்டம் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.
அதேபோன்று எலுவன்குளத்திலிருந்து (எலவங்குளம்) இஸ்மாயில்புரம் பகுதிக்கு தண்ணீர் வழங்கும் செயத்திட்டமும் இன்னும் பூர்த்திச் செய்யப்படாமலிருக்கின்றது.
இச்செயத்திட்டங்களை செய்து முடிப்பதில் உள்ள தடைகள் அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் அப்பிரதேச மக்களின் இடர்பாடுகள் என்பன தொடர்பாகவே இங்கு கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு இவ்விரண்டு செயற்திட்டங்களையும் மிக விரைவில் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் அவரகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.