புத்தளம் அறுவைக்காடு குப்பை திட்டத்துக்கு எதிராக இன்று (15) புத்தளம் நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.இந்த போராட்ட களத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டார்
கிளீன் புத்தளம் எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட இக் கவனயீர்ப்பில் பல நூற்றுக்கணக்கான மக்கள் உட்பட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றதூடன் கோசங்களை எழுப்பினர். புத்தளம் குப்பையல்ல உள்ளிட்ட இதனால் ஏற்படும் பாதகமான தாக்கங்கள் பற்றியும் கோசங்களை எழுப்பினர்.
கொழும்பு நகரில் உள்ள குப்பைகளை புத்தளத்துக்கு கொண்டு வருவதை தடை செய்யக்கோரியும் மெகா நகர அபிவிருத்தி அமைச்சின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மக்கள் தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.புத்தளம் நகர் முழுவதும் இன்றைய தினம் கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
பிரதியமைச்சரின் விஜயத்தின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவருமான நவவி கட்சியின் மாவட்ட மற்றும் பிரதேச அமைப்பாளர்களுக்கு கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்…