Breaking
Fri. Jan 10th, 2025

-A.R.A.RAHEEM

நேற்று முன்தினம் (18) புத்தளம் ஆலங்குடா பகுதிக்கான திடீர் விஜயமொன்றை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் மேற்கொண்டார்

வடக்கிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேறிய மக்கள் வாழும் கிராமமான ஆலங்குட மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் வாழும் மக்களை சந்திப்பதற்காக இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது

வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்வானது அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் வடக்கில் மீள்குடியேறிவரும் இந்தவேளையில் புத்தளம் பகுதியில் வாழும் வடக்கு மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கும் நோக்குடன் இடம்பெற்ற இந்த நிகழ்வானது ஒவ்வொரு மஹல்லா
வாசிகளையும் தனித்தனியாக சந்தித்து அவர்களது குறைகளை கண்டறியும் நிகழ்வாகவே நடைபெற்றது

அல் ஜாமிஉல் முனவ்வர் ஜும்மா மஸ்ஜித்(அரபா நகர் ),மஸ்ஜிதுன் முஜாகிரின் (ஜின்னா புரம்) , மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளி (கல்முனைக்குடி ஏ) , மஸ்ஜித்துர் ரகுமான் (அல் அசாம் ) போன்ற மஹல்லாவை சேர்ந்த மக்கள் இம் மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்

வீதி விளக்கு, சில பாதைகளை கிறவள் மூலமாக புனரமைப்பு , இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணம் மற்றும் மைதானம்,
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் மாணவர்களின் கல்விக்கு தேவையான அனைத்து விடயங்களும் பேசப்பட்டது

இதனைத்தொடர்ந்து உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள் பொதுமக்கள் முன்வைத்த பிரச்சனைகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக தன்மூலமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் மூலமாகவும் செய்து தருவதாக வாக்குறுதி வழங்கிவைத்தார்.

6 4 3 2 1

By

Related Post