Breaking
Sun. Dec 22nd, 2024

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்கள் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மியின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ் மொழிப்பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப்பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர், ஆரம்ப பிரிவு பாட இணைப்பாளர் வீ.அருனாகரன், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், எஸ்.எச்.எம்.நியாஸ், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் பீ.எம்.ஜனாப் , முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி உள்ளிட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், பாடசாலைக்கு விடுமுறையின்றி வருகை தந்த மாணவர்கள், வகுப்பறையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள், மாகாணம், தேசிய ரீதியில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகள் என்பனவற்றில் பிரகாசித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் எனப் பலரும் அதிதிகளினால் நினைவுச் சின்னம், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

14563406_1822814048003145_3496784865643992804_n

By

Related Post