புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் அண்மையில் புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
புத்தளம் நகரின் பிரதான வைத்தியசாலையின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கண்டறிவதனை குறிக்கோளாக கொண்டதாக இவ்விஜயம் அமைந்திருந்தது. இவ்வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி டாக்டர் சுமித் ரத்தனாயக்க மற்றும் வைத்தியர்கள் உடனான மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்றும் இங்கு நடைபெற்றதுடன், வைத்தியசாலை வளாகம், கட்டிட வேலைகள் நடைபெறும் கட்டிடங்கள் மற்றும் வைத்தியசாலையின் நவீன வசதி வாய்ப்புக்கள் என்பவற்றையும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் பார்வையிட்டார்.
அத்துடன், வைத்தியசாலையில் நடைப்பெற்றுவரும் அனைத்து கட்டிட நிர்மாண வேலைகளையும் மிகவும் துரிதமாக செய்து முடிப்பது உற்பட வைத்தியசாலையின் பிரதான குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
எதிர்வரும் மார்ச் மாதம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் அழைப்பின்பேரில் புத்தளம் வரவுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் விஜயத்தின் ஒரு பகுதியாகவே இன்றையா வைத்தியசாலை விஜயமும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.