Breaking
Sun. Nov 17th, 2024

புத்தளம் வைத்தியசாலை தொடர்பாக பல கருத்துக்களும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ள நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீன் அவர்களினதும் , பிரதி தலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எச்.எம்.நவவி அவர்களினதும் , புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அமைப்பாளர் அல்ஹாஜ் அலிசப்ரி அவர்களினதும் முயற்சியின் பயனாக புத்தளம் வைத்தியசாலையை துரிதமாக அபிவிருத்தி செய்யும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் அலிசப்ரி அவர்கள் நேற்று வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையில் உள்ள குறைப்பாடுகளை கேட்ட பின்னர் அதனை அப்படியே கட்சியின் தலைமைக்கு கொண்டு சென்றிருந்தார் . அதனை செவியுற்ற தலைவர் நேற்று மதியம் வைத்தியசாலைக்கு தொடர்பு கொண்டு டாக்டர் சுமித் அவர்களுடன் உரையாடியுமிருந்தார் .
அதனை தொடர்ந்து நேற்று மாலை சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவுடன் நமது தலைவர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீன் அவர்களும் , பிரதி தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.நவவி அவர்களும் இங்குள்ள குறைப்பாடுகள் தொடரபில் பேசியுமிருந்தார்கள் . இதனடிப்படையில் இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் சுகாதார அமைச்சரை சந்தித்து பேசவுள்ளார்கள் .
இச்சந்திப்பில் விரைவில் சுகாதார அமைச்சரை புத்தளம் அழைத்து வரவும் / வைத்தியசாலையின் குறைகளை நிவர்த்திக்கவும் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது .
இது இப்படியிருக்க நேற்றைய சந்திப்புக்கு பின்பு டாக்டர் சுமித் அவர்களுக்கு வடமேல் மாகாண சபையில் இருந்து அழைப்பு வந்து இன்று அங்கு சென்றிருப்பதாகவும் பல நல்ல விடயங்கள் நடந்து இருப்பதாகவும் அறிவித்துள்ளார் . இன்னும் தான் அங்கேயே இருப்பதாகவும் கூட்டம் முடிந்த பின்னர் விடயங்களை தெரிவிப்பதாகவும் மேலும் தெரிவித்தார் .
இந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியளிக்கும் தருவாயில் டெங்கு போன்ற கொடிய நோய்களுக்கான தீர்வுகளும் , ஏனைய நோய்களுக்கான அவசர வைத்திய சேவைகள் , இரத்த பரிசோதனைகள் அனைத்தும் இந்த வைத்தியசாலையில் சிறப்பாக இடம்பெறும் என்று தெரிவித்தார்.

Related Post