Breaking
Fri. Nov 15th, 2024

நோர்வே பிரதமர் எர்னா சோல்பெக் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தினூடாக இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவு புத்தெழுச்சி பெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நோர்வே பிரதமர் இலங்கைக்கு வந்ததன் மூலம் இரண்டு நாடுகளும் தமது உறவை மேலும் வலுப்படுத்தவும் மீள்உருவாக்கம் செய்யவும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. விசேடமாக இரண்டு நாடுகளினதும் அர்ப்பணிப்பு புத்தொழுச்சி பெற்றுள்ளது.

நோர்வே பிரதமர் எர்னா சொல்பெக் ஐ.நா. செயலாளர் பான்கீமூனினால் நிரந்தரமான அபிவிருத்தி இலக்கு குழுவின் இணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தவகையில்  அவரின் விஜயம்  முக்கியத்துவமிக்கதாக அமைந்துள்ளது.  நோர்வே பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையிலான உறவு 65 வருடகால பழமை வாய்ந்தது. அண்மைக் காலத்தில் நோர்வே வெளிவிவகார அமைச்சர் மற்றும் நோர்வே இராஜாங்க செயலாளர் உள்ளிட்டோர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கடந்த ஜூன் மாதம் நோர்வேக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

நோர்வே பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது இலங்கையின் மீன்பிடித்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவுவதற்கு நோர்வே இணங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இலங்கையானாது அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் அடைந்துள்ள முன்னேற்றம் நேர்வே பிரதமரின் பாராட்டுக்கு உரித்தானது.

By

Related Post