புனித ஹஜ்ஜை முன்னிட்டு புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் ஹஜ்ஜிற்குரிய புனித இடங்களில் 18,680 MW (மெகாவட்ஸ்) சக்தி கொண்ட மின்சாரம் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளதாக சவுதி மின்சார நிறுவனத்தின் சிரேஷ்ட அலுவலர் சியாட் பின் அல் செய்ஹா தெரிவத்துள்ளார். இப்பாரிய திட்டத்தின் ஒரு பகுதி தந்பொழுது நிறைவடைந்திருப்பதாகவும், மற்றுமொரு பகுதி தொடர்வதாகவும் அல் செய்ஹா தெரிவிக்கிறார்.
இதன்படி, ஹரம், ஜபல் ஒமர், மக்கா நகர், புனித இடங்களின் பாதுகாப்பு தலைமைக்காரியாலயங்கள் மற்றும் மினா உட்பட இதர இடங்களிலும் 18,680 MW சக்தி வலு கொண்ட மின்சாரத் திட்டம் தொடரப்படுவதாகவும் தேவை ஏற்பட்டால் மேலதிகமாகவும் மின்சக்தியை வழங்க முடியும் எனவும் அல் செய்ஹா கூறுகிறார்.
புனித இடங்களில் 18,680 மெகாவட்ஸ் சக்திகொண்ட மின்சாரம்
1 மெகாவட் (MW) = 1 மில்லியன் வட்ஸ் / ஆயிரம் கிலோவட் (kW)